அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மே மாத ஒன்று கூடல் இன்று
(29.05.2016) ஞாயிற்றுக் கிழமை போரத்தின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்டீன்
தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் காலை 10.30
மணியளவில் நடைபெற்றது.இதன்போது ஊடகவியலாளர்களின் திறமைகளை அதிகரித்துக் கொள்வதற்கான பயிற்சிக் கருத்தரங்குகள், களப் பயணங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் உறுப்பினர்களின் நலன்சார் விடயங்களும் ஆராயப்பட்டது.
அத்தோடு எமது போரத்தின் உறுப்பினர் முஹாஜிரீன் எழுதிய "கடலோரத்து மணல்" கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் பாலமுனையில் அடுத்தவாரம் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்கான பூர்வாங்க ஏற்பாடுகளை ஏற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற ஊடாகவியலாளர்களின் ஒன்றுகூடல் ஒன்று ஆலையடிவேம்புப் பகுதியில் இடம்பெற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.




Post a Comment