அரசியல் யாப்பு திருத்தத்துக்கான உலமா கட்சியின் ஆலோசனைகள், தீர்வுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,சில முஸ்லிம் கட்சிகள் அரசியல் யாப்பு திருத்தத்துக்குரிய தமது தீர்வு திட்டத்தை தயாரிக்க முடியாமல் இன்னமும் திண்டாடிக்கொண்டிருப்பதுடன் ஆலோசனைகள் நடாத்துவதாக சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் சூழ் நிலையில் உலமா கட்சி தனது தீர்வுத்திட்டத்தை தயாரித்துள்ளது நல்லதொரு வழி காட்டலாகும்.
இந்த வாரம் பாராளுமன்றத்தில் உள்ள அரசயில் யாப்பு சபைக்கு அதனை நாம் ஒப்படைக்கவுள்ளோம். அதனை தொடர்ந்து எதிர் வரும் 22ந்திகதி கல்முனையில் நடை பெறும் ஊடக மாநாட்டில் நாம் முன் வைத்துள்ள தீர்வு திட்டம் பற்றி பகிரங்கமாக வெளியிடுவோம் எனவும் முபாறக் மௌலவி தெரிவித்தார்.

Post a Comment