
கொழும்பு ரோயல் கல்லுாாியின் 165வது
பரிசளிப்பு விழா கல்லுாாி மண்டபத்தில் புதிய அதிபா் பி.ஏ அபேரத்தின
தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள், ஆசிரியர்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான அகில விராஜ்
காரியவாசம், ரவுப் ஹக்கீம், கயந்த கருநாதிலக்க, ஹா்ச டி சில்வா,
ரவி கருநாயக்க, மலிக் சமரவிக்கிரம, இராஜங்க அமைச்சா இராதா
கிருஸ்னன் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு
உரையாற்றிய ஜனாதிபதி -
இந்த நாட்டில் பிரபல்யமான பாடசாலைகளில் தமது
பிள்ளைகளைச் சோ்ப்பதற்காக பெற்றோா்கள் அரசியல் வாதிகளையும், கல்வி
அதிகாரிகளையும் நாடி படையெடுப்பதை தடுத்து சகல பாடசாலைகளையும்
பிரபல்யமான பாடசாலையாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
எந்தவொரு
அரசாங்கமும் இதுவரை பாடசாலை அனுமதி குறித்து ஒரு முறையான திட்டம்
வகுக்கவில்லை, இது குறித்து கல்வியமைச்சரும் அதிகாரிகளும் உரிய கவணம்
செலுத்தி ஒரு நிலையான வலுவான திட்டமொன்றை வகுத்து பாடசாலை அனுமதிக்கான
புதிய முறைமை ஒன்றை ஏற்படுத்தும்படி ஜனாதிபதி வேண்டிக் கொண்டாா்.
சகல
பாடசாலைகளும் சமமான முறையில் போட்டித் தண்மையற்ற முறையில் பாடசாலைகளை
முன்னேற்ற வழிவகுக்குமாறும் ஜனாதிபதி வேண்டிக் கொண்டாா்.
Post a Comment