அட்டாளைச்சேனை
முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு இரண்டு மாடி கட்டிடம் அமைப்பதற்கான
அடிக்கல் நாட்டும் விழாவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கான
இப்தார் நிகழ்வும் நேற்று (18) கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம்.
நசீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு
பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும்,
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில் கிழக்கு
மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கௌரவ அதிதியாகவும், சுகாதார பிரதியமைச்சர்
பைஸல் காசிம் சிறப்பு அதிதியாகவும் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியின்
முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment