Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

SPORTS | உலக சாதனையுடன் இலங்கையை வெற்றிகொண்டது இங்கிலாந்து !

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பர்ஹிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் மத்யூஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்களை குவித்தது. இதனையடுத்து 255 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பிரம்மிக்கதக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஜேசன் ரோய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் இலங்கை பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். ஆரம்ப விக்கெட்டுக்கு இந்த ஜோடி 34.1 ஓவர்களில் 256 ஓட்டங்களை சேர்த்தது.

ஜேசன் ரோய் 112 ஓட்டங்களையும், ஹேல்ஸ் 133 ஓட்டங்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம் சாதனை வெற்றியை இங்கிலாந்து பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் விக்கெட் இழப்பின்றி அதிக ஓட்டங்களை விரட்டிய அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றது. இதற்கு முன் சிம்பாவே அணிக்கு எதிராக 236 ஓட்டங்களை விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து அணி பெற்றுக்கொண்டதே சாதனையாக இருந்தது.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget