-யூ.கே.காலித்தீன்-
சாய்ந்தமருது கடலின் அடிப்பரப்பை துப்பரவு செய்யும் வேலைத் திட்டம் இன்று (24) வெள்ளிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து இக்கடல் பகுதியினுள் கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுப் பொருட்கள் அள்ளுண்டு சென்று தேங்கிக் கிடப்பதனால் அவை மீன்பிடி தொழிலுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகின்றன.
இதனால் கரைவலை மீன்பிடி தொழில் கடந்த பல வருடங்களாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வலைகள் வெட்டுப்படுவதனால் தாம் நஷ்டமடைவதாகவும் இப்பிரதேச மீனவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அரச வர்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. குழுத்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அவர், அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அமைச்சர் மேற்படி வேலைத் திடடத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இவ்வேலைத் திடட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப் , உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment