-ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது வொலிவோரியன்சுனாமி வீட்டுத்திட்ட தொகுதியில்இடம்பெற்று வரும் போதைப்பொருள்பாவணை, சிறுவர் மற்றும்பெண்களுக்கு எதிரானகுற்றச்செயல்களை தடுப்பதற்கும்,எதிர்காலத்தில் இவ்வாறானபிரச்சினைகள் வராமல் சிறுவர்மற்றும் பெண்களைபாதுகாப்பதற்குமாக மகளிர் மற்றும்சிறுவர் விவகார ஆலோசனைநிலையம் திறந்து வைக்கப்பட்டதாகபிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேசசெயலகத்தினால் மகளிர் மற்றும்சிறுவர் விவகார ஆலோசனைநிலையம் வொலிவோரியன் சுனாமிவீட்டுத்திட்ட தொகுதியில் இன்று (08)புதன்கிழமை திறந்து வைக்கும்நிகழ்வு இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேசஉளவளத்துணை உத்தியோகத்தர்கள்ரீ.எம்.எம்.ஹப்ராத்,எல்.ரீ.எம்.இயாஸ் ஆகியோரின்தலைமையில் இடம்பெற்றஇந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேசசெயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதமஅதிதியாக கலந்து கொண்டு திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது உதவிபிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ்,சமூக சேவைகள் உத்தியோகத்தர்எஸ்.எம்.அன்சார், பிரதேச சிறுவர்பாதுகாப்பு உத்தியோகத்தர்எம்.எஸ்.எம்.சாஜித், பொருளாதாரஅபிவிருத்தி உத்தியோகத்தர்எஸ்.எம்.எம்.சிபான், மகளிர்அபிவிருத்தி உத்தியோகத்தர்ஏ.ஆர்.நிஸ்வானுல் ஜன்னா, சமுர்த்திவங்கி உதவி முகாமையாளர்ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்துதெரிவிக்கையிலேயே பிரதேசசெயலாளர் மேற்கண்டவாறுதெரிவித்தார். அவர் மேலும்தெரிவிக்கையில்,
சமூகத்தில் குற்றச்செயல்அதிகரிப்பதற்கு மூல காரணமாகபுகைத்தல் மற்றும் போதைப்பொருள்பாவணை காணப்படுகின்றது. இதனைஇப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தபல்வேறு வேலைத்திட்டங்களைஎனது வழிகாட்டலில் எமது பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள்மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று நாட்டில் சிறுவர்துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முனை என்பனஅதிகரித்துள்ள நிலையில் எமதுபிராத்தியத்தில் அது முற்றாககட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில்இடைநடுவில் சிறு சிறுசம்பவங்களும் இடம்பெறுகின்றன.இதனை முழுயாக கட்டுப்படுத்தும்நடவடிக்கைகளில் எமது பிரதேசசெயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுஉத்தியோகத்தர்கள், சமுர்;த்தி சமூகஅபிவிருத்தி பிரிவுஉத்தியோகத்தர்கள் முழு வீச்சளவில்செயற்படுகின்றனர் எனவும்தெரிவித்தார்.
Post a Comment