
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் இப்தார் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக் கிழமை 12.06.2016) சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் போரத்தின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் நடைபெற்றது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீனின் பிரதிநிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.மஹ்ரூப், உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான கவிந்திரன் கோடிஸ்வரன், அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் எம்.ஏ.நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் எம்.ஏ.மஜீத் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எம்.பசீர், அம்பாரை மாவட்ட உலமா சபையின் தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) உட்பட அரசியல் பிரமுகர்கள், திணைக்களத் தலைவர்கள், உலமாக்கள், தமிழ், முஸ்லிம், சிங்கள சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
அல்-ஹாபிழ் ஏ.எல்.நிப்ராஸ் அவர்களின் கிறாத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில்
மௌலாவி முப்தி கே.எல்.சியானுடீன் இப்தார் நற்சிந்தனை வழங்கினார். அவர் தமது உரையில் ஊடகவியலாளர்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எவ்வாறு சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். ஊடகவியலாளர்கள் சமூகத்தின் தேவைகளை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும். தங்களின் தனிப்பட்ட கோபங்கள், விருப்பங்களுக்காக ஊடகத்துறையை பயன்படுத்தக் கூடாது.
அவ்வாறு செய்வீர்களாயின் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக வேண்டியேற்படும். ஆதலால், இதனை கவனத்திற் கொண்டு ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்.
இங்கு பல துறைகளைச் சார்ந்தவர்களும் உள்ளீர்கள் நீங்கள் ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டும் நல்ல விடயங்களை கவனத்தில் எடுத்து அதனை நிபர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்றார்.
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் செயலாளர் எம்.சஹாப்தீன் நன்றியுரை நிகழ்த்தினார். இதனை; பின்னர் இப்தார் நிகழ்வு துஆவுடன் நிறைவடைந்தது.
இதற்கு முன்னதாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் உத்தியோகபூர்வ சீருடை (ரீ-சேர்ட்) தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீனினால் உறுப்பினர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment