சாய்ந்தமருது 15ஐ சேர்ந்த மெளலவி அல்-ஹாபில் நப்ராஸ் ஹனிபா (ரஹ்மானி) அவர்கள்
அக்குரனை ரஹ்மானியா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று, தனது முதலாவது
(கன்னி) குத்பா பிரசங்கத்தினை சாய்ந்தமருது தக்வா ஜூம்ஆ பள்ளிவாசலில் அண்மையில் நிகழ்த்தினார்.
குறித்த இளம் மெளலவிக்கு
தக்வா ஜூம்ஆ பள்ளிவாசல்
நிர்வாகத்தினரினாலும் ஊர்மக்களினாலும்
பாரட்டி கெளரவித்து நினைவுச்சின்னம்
வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது அகில இலங்கை
ஜம்ய்யத்துல் உலமா சபையின்
சாய்ந்தமருது கிளையின் தலைவர்
யூ.எல்.காசீம் மெளலவியின் வழிகாட்டலிலும்,
தக்வா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் பொறியியளாலர்
எம்.எம்.எம். சதாத் அவர்களின்
தலைமையிலும் நடைபெற்றது.
இறுதியில் ஊர்வலமாக பக்கீர் பாவாமார்களினதும், ரஹ்மானியா
அரபுக் கல்லூரியின் மாணவ உலமாக்கலாலும் பைத் சொல்லப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்சென்று
அவரது வீட்டில் விடப்பட்டது.
Post a Comment