-எம்.வை. அமீர், எஸ்.எம்.எம்.றம்ஸான்-
எம்.ஐ.எம் அஷ்ஹர் தனது ஊடக வரலாற்றை
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் கையெழுத்து பத்திரிகை துறையில்
ஆரம்பித்த தனது எழுத்துப் பணியை பின்னர் ஸாஹிரா பத்திரிகையில் தொடர்ந்தார்.
சிறு பராயத்திலிருந்தே விளையாட்டுத்துறையில் ஏற்பட்ட உத்வேகம் 1980 ஆம் ஆண்டுகளில் தனியான விளையாட்டுக் கழகம் ( பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் ) ஒன்றை ஆரம்பிக்கத் தூண்டி அதன் தாக்கம் பின்னர் சாய்ந்தமருது தாமரை விளையாட்டு மைதான அமைப்பில் தொடர்ந்தது. சுனாமியின் பின்னர் அந்த தாமரை விளையாட்டு மைதானம் சாய்ந்தமருது வைத்தியசாலைக்கும , சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்திற்கும் கூறுபோடப்பட்டு விட்டது.
அந்த கால கட்டத்தில் விளையாட்டுச் செய்திகளை அப்போது பிரதேச செய்தியாளர்களாக இருந்த ஏ.எல்.ஜுனைதீன் , கிராம சேவை உத்தியோஸ்தர் அப்துல் ஹமீட் மூலமாக பத்திரிகைகளில் வெளிவரச் செய்து, பின்னர் ஆங்கில் மொழிமூலம் தேசிய விவசாய டிப்ளோமா பட்டப் படிப்பினை மேற்கொண்ட போது ஆங்கில மொழியிலும் , சிங்கள மொழியிலும் தேர்ச்சி பெற்று, ஆங்கில மற்றும் சிங்கள பத்திரிகைகளில் செய்திகளை வெளியியட்டமை.
தனது முதலாவது ஆசிரியர் நியமனம் மல்வான அல் முபாறக் தேசியக்கல்லூரியில் 1985 ஆம் ஆண்டு உயர்தர விஞ்ஞான பிரிவை ஆரம்பித்து அதன் பகுதித் தலைவராகவும் தாவரவியல் ஆசிரியராகவும் நியமனம் பெற்றதிலிருந்து 1994 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வரும் வரை கிட்டத்தட்ட 10 வருடங்கள் மல்வான பிரதேச செய்திகளை அப்பிரதேச ஊடகவியலாளர்கள் மூலமான வெளியிட்டு வந்தார். .அந்த வகையில் எம்.முபாறக் அலி அவர்களை இன்றும் நினைவு கூருகின்றார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தாவரவியல் பாடத்தை அக்கால கட்டத்தில் கற்பித்துக் கொண்டிருந்த காலஞ்சென்ற ஏ.எல்.எம்.பளீல், கல்முனை பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றதனை தொடர்ந்து தற்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் அப்போது கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிக்கு பிரதி அதிபராக இருந்த போது தாவரவியல் பாடத்தை கற்பிப்பதற்காக இவரை மல்வானையில் இருந்து இங்கு கொண்டு வந்தார்கள்.
ஊடகத்துறையில் மட்டுமல்ல கற்பித்தல் துறையிலும் வல்லமை பெற்ற இவர் ஒரு சகலகலாவல்லவர். மல்வானையிலும் கல்முனையிலும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களையும் மாணவிகளையும் மருத்துவம் , பல் வைத்தியம் , விவசாயம் , மற்றும் விஞ்ஞானத்துறை பட்டதாரிகளையும் உருவாக்கி பெருமை கண்டவர்.
கல்முனையில் பிரபலம் பெற்ற தனியார் கல்வி நிறுவனமான பிரிலியன் கல்வி நிலையத்தில் 1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தாவரவியல் பாடத்தை கற்பித்த இவர் 2000 ஆம் ஆண்டு முதல் மாணவர்களிடம் பணம் பெற்று கற்பிப்பதில் ஏற்பட்ட மனக்கஸ்டம் காரணமாக அந்த துறையில் இருந்து நீங்கிக் கொண்டார்.
நவமணி பத்தரிகை ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம்.அஸ்ஹர் மூலமாக அதன் செய்தியாளராக நுழைந்து செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதியதுடன் கல்வி மணி என்ற பகுதியையும் ஆரம்பித்தார். , மெற்றோ நியுஸ் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது அதன் செய்தியாளராக நுழைந்து, விடிவெள்ளி பத்திரிகை வீரகேசரி பத்திரிகையுடன் இணைந்து வந்த போது அதன் ஆரம்ப கால செய்தியாளராக இருந்துள்ளமை.
சுனாமி அனர்த்த்தின் போது பிரதேச செய்திகளை இப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஊடகவியலாளர்கள் மூலமாக தினகரன் , தினக்குரல் , சுடரொளி , வீரகேசரி போன்ற பத்தரிகைகளில் பிரசுரித்த இவருக்கு தானும் தேசிய பத்திரிகைக்கு எழுத வேண்டும் என்ற ஆசையில் 2006 ஆம் ஆண்டு தனது அன்புக்குரிய மாணவன் அழுத்கமயைச் சேர்ந்த மிஸ்வரின் ( இன்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம.எம்.ஹரீஸின் ஊடக செயலாளர்) தூண்டுதலினால் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் மாளிகைக்காடு குறூப் நிருபராக நியமனம் பெற்று அன்று முதல் தினகரன் , டெய்லி நியுஸ் , சன்டே ஒப்சேவர் , தினமின , சிலுமின ஆகிய பத்திரிகைகளில் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.
அம்பாறை மாவட்டத்தில் மூன்று மொழிகளிலும் செய்திகளை எழுதுகின்ற ஒரேயொரு ஊடகவியலாளர் இவர் என்பதில் பெருமையடைகின்றார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் அதன் ஒழுக்காற்று சபை உறுப்பினரதாகவும் தற்போது கடமையாற்றுகின்றார்.
2007 ஆம் ஆண்டு முதல் தினக்குரல் பத்திரிகையின் சாய்ந்தமருது நிருபராக நியமனம் பெற்று இன்றுவரை எழுதி வருகின்றார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.எம். அஸ்ஹர் இற்கு கலசம்.கொம் இனது அன்பான வாழ்த்துக்கள்.
கல்முனை நெனசலவின் பணிப்பாளர் எஸ்.எம். ஹாஜா
தலைமையில் ஆசாத் பிளாசா வரவேற்புமண்டபத்தில் நேற்று (24) ஆம் திகதி இடம்பெற்ற 7 வது வருட சான்றிதழ்
வழங்கும் நிகழ்வின்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.எம் அஷ்ஹர் உயர் கௌரவம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Post a Comment