Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | கல்முனை நெனசலவின் 7 வது வருட சான்றிதழ் வழங்கும் விழா 2016

-எம்.வை.அமீர்-
கல்முனை நெனசலவின் 7 வது வருட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்முனை நெனசலவின் பணிப்பாளர் எஸ்.எம். ஹாஜா தலைமையில் ஆசாத் பிளாசா வரவேற்புமண்டபத்தில் நேற்று (24) இடம்பெற்றது.

இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக தென்கிழக்குபல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் பிரயோகவிஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனாவும் கௌரவ அதிதியாக கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் (FEMCO) தலைவரும் ஓய்வு பெற்ற கல்முனை வலய உதவிக்கல்விப் பணிப்பாளருமான  மௌலவி இசட்.ஏ.நதீர்ரும் கலந்துகொண்டதுடன்,  பாடசாலைகளின் அதிபர்கள், பல்கலைக்கழக, சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரயர்கள் என பலர் கலந்துகொண்ட நிகழ்வில் 12 பாடநெறிகளை பூர்த்திசெய்த 253 மாணவர்கள் சான்றிதழினை பெற்றுக்கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த கல்முனை நெனசலவின் ஸ்தாபகரும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளருமான ஏ.எல்.ஏ. மஜீட், கல்முனை கே.டி.எம்.சி. எனப்படும் கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான சபையால் கடந்த 2007ல் ஆரம்பிக்கப்பட்ட நெனசலவானது கிழக்கு மாகாணத்தில் உள்ள நெனசலகளில் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் 8/0078.என்ற இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

யுத்தமற்ற சூழலில் இளைஞர் யுவதிகளுக்கு, திறமைக்கு ஒத்துழைப்பு, வாழ்;கைக்கு புத்தொளி, பிரச்சினைக்கு தீர்வு. கிழக்கிலங்கையைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சி தொழில் வழிகாட்டி மற்றும் பயிற்சி. தகவல் தொலைத்தொடர்பாடாடல் தொழிநுட்டமுகவர் நிலையம் (ICTA) மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழிநுட்பவியல் அமைச்சினால் வழங்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் சிறந்த நெனசலவிற்கான அறிவகங்களின் அங்கீகாரம் சுவர்ன சம்மான விருதினையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.

உலக அறிவு, கிராமத்திற்கு எனும் தூர நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம்த்தின் கல்முனை கிளை  2007ல் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆரம்பத்தில் இணையப் பாவனையினை ஈ-லய்ப்ரெரி (E- Library) இனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.

2008 ல் கொம்பியூட்டர் கல்வியினையும், 2009ல் தொழிநுட்ட தொழில் சார் கல்விநெறிகளையும் ஆரம்பித்தது. இன்றுவரை 4500 மாணவர்கள் வரை எமது நிறுவனத்தினால் கல்வி பயன்பெற்றுள்ளனர்.

கல்முனை கே.டி.எம்.சி. நெனசலவின் செயற்பாடுகளில்

01. 2015/2016ம் கல்வியாண்டில் 320 மாணவர்கள் இந்நிறுவனத்தின்  திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.           

02. உயர் கல்விக்கான சிறந்த வழிகாட்டலினை வழங்கி அவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வியினை பெறுவதற்கான அனுமதியினை பெற்றுக்கொடுத்தமை.

03. இக்கல்வி நிறுவனத்தில் பாட நெறியினை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உதவியோடும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுடனும் இணைந்து மத்திய கிழக்குநாடுகளில் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தமை.

04. எமதுநிறுவனத்தில் பாடநெறியினை பூர்த்திசெய்து சுய தொழில் புரிவதற்கு ஊக்கமுள்ளமாணவர்களுக்கு வளநிலையங்களின் உதவியுடன் கடன் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமை.

05.க.பொ.த. உயர்தரபரீட்சையில் இரண்டுபாடங்களில் மட்டும் சித்தி எய்தி வெளிவாரிப் பட்டப்படிப்பிற்காக திண்டாடியமாணவர்கள் இன்நிறுவனத்தின் சான்றிதழுடன் பட்டப்படிப்பினை மேற்கொள்ள உதவியமை.

06.க.பொ.த.(சா.த)இக.பொ.த.(உ.த)பரீட்சையில் தகவல் தொழிநுட்ப பாடத்திற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு முகாம்களை நடாத்தியமை.

07. பிரதேச வர்த்தகர்களுக்கு இணையத்தின் அவசியம் மற்றும் வியாபார விளம்பரங்களை இணையத்தில் கொண்டு வருவதற்கான படிமுறைகள் பற்றிய கருத்தரங்குகளை நடாத்தியமை.

08. மார்கக் கல்விபயிலும் மாணவர்களுக்கு அவர்களின் அறிவுவிருத்திக்காக இணையப்பாவனை மற்றும் கொம்பியூட்டர் பாடநெறியினை இலவசமாக நடாத்தியமை.

09. சமூகவலையமைப்புக்களில் (Face book, Twitter ect..))வீழ்ந்து சீரழியும் மாணவர்களை அதிலிருந்து மீட்பதற்கு பெற்றோர்கள்   மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பதனை பெற்றோர்களுக்கு உணர்த்தும் செயல்திட்டம்.

10. பிரதேச மீனவர்ளுக்கான புPளு தொழிநுட்பத்தினை அறிமுகப்டுத்தி அவர்களுக்கான கருத்தரங்கினை மேற்கொண்டமை.

11.கூலித்தொழில் புரிந்து வெளிநாடுகளுக்கு குறைந்த சம்பளத்துடன் வேலை செய்ய முயற்சித்தவர்கனை இனம் கண்டு அவர்களுக்கு ஊஊவுஏ பாடநெறியினை இலங்கையின் பிரசித்தி பெற்ற நிறுவனத்துடன் இணைந்து அப்பாட நெறியினை நடாத்தி பாட நெறியினை நிறைவுசெய்த மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியமை.

12.டெங்குநோய் விழிப்புணர்வு மற்றும் சிரமதான நிகழ்வுகளை மேற்கொண்டமை.

13.மாணவர்கள் க.பொ.த(சாதாரணதர)த்துடன் தங்களின் கல்வியினை தொடரமுடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு NVQ பாடநெறியுடன் இணைந்து DIT, HNDIT மற்றும் UNIVOTEC ஊடாக உயர்கல்வியினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் ஆலோசனைகளையும் வழங்கியமை. போன்ற விடயங்களை எடுத்துக்கூறினார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget