நிழல் அமைச்சரவையில் தனது பெயரும் இடம்பெற்றிருப்பது குறித்து தான்
எதனையும் அறிந்திருக்கவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் லோஹான் ரத்வத்த
தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், நிழல் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதோடு, அதில் நகரமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக லோஹான் ரத்வத்த தெரிவாகியுள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும், நிழல் அமைச்சரவை நியமனம் மற்றும் தனது பெயரும் அதிலுள்ள என்பது குறித்து தான் ஊடகங்கள் மூலமே தெரிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த அமைச்சரவை யாரால் நியமிக்கப்பட்டது என்பது குறித்தும் தான் அறிந்திருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தன்னை அதிலிருந்து நீக்குமாறு கோரியுள்ளதாகவும் லோஹான் ரத்வத்த இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொது எதிரணியாக அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தான் தொடர்ந்தும் இணைந்திருப்பதாகவும் அவர், அத தெரணவிடம் கருத்து வௌியிடுகையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment