வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 6 இலட்சம் பேரிடம் எச்.ஐ
வி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு
குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கடந்த ஆறு மாதங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 127 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கான உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் சிசிர லியனகே கூறியுள்ளார்.
குறிப்பாக ஆண்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகமாக ஏற்படுவதாகவும் தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற உடலுறவுகளில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு அதிகளவில் எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமகவே 95 வீதமானவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுவதாகவும் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

Post a Comment