நிர்ணய விலையை விடக் கூடுதல் விலைக்கு, பொருட்கள்
விநியோகிக்கப்படுகின்றமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின்
போது 99 வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 310 வர்த்தக நிலையங்களில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டன.
200 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினரால் நாடளாவிய ரீதியில் இவ்வாறன சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது
வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விநியோகிப்பதால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோழி இறைச்சி, சிவப்பு பருப்பு, நெத்தலி, கடலை, பயறு, ரின்மீன், வெண்சீனி, கோதுமை மா, இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மற்றும் உள்ளூர் பால்மா, இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், கட்டா கருவாடு, சாலயா மற்றும் மாசி கருவாடு, சஸ்டஜன் மா என்பவற்றிற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலை விதித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment