Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை உருவாக்கித்தர மு.கா. முன்னிற்கவேண்டும் - பிரதி முதல்வர் மஜீத்

கல்முனை மாநகர சபையின் ஆயுட்காலம் நிறைவடைந்து இறுதி அமர்வு இன்று இடம்பெற்றது. இவ் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்கள் பின்வருமாறு கூறினார்....

"சாய்ந்தமருது மக்கள் மிக நீண்ட நாட்களாக தங்களுக்கென தனியான உள்ளூராட்சி மன்றமொன்றை கோரி வருகின்றனர். 1924ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை கரைவாகு தெற்கு என்ற கிராமாட்சி மன்றத்தின் ஆட்சி நிலவி வந்தது. 1972 இல் அன்றைய சிறிமாவோ அம்மையார் அரசாங்கம் முதலாவது குடியரசு சாசனத்தை அறிமுகப்படுத்தியதன் விளைவாக நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் விஷேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டது.

1981ஆம் ஆண்டு அன்றைய ஐ.தே.க அரசாங்கம் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை அறிமுகப்படுத்தியதனால் உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் மாவட்ட அபிவிருத்தி சபை உப அலுவலகம் என அழைக்கப்பட்டது. 1985இல் பிரதேச சபைகள் சட்டம் அமுலுக்கு வந்ததனால் கரைவாகு தெற்கு, கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு, கல்முனை பட்டிண சபை உள்ளடங்களான நான்கு உள்ளூராட்சி சபைகளையும் ஒரு பிரதேச சபையாக பிரகடனம் செய்யப்பட்டது. இப்பிரகடனமானது சாய்ந்தமருது மக்களுக்கு செய்த பெருத்த அநீதியாகும்.

இது அன்றைய மாவட்ட அமைச்சராகவிருந்த ஏ.ஆர். மன்சூரின் அனுசரனையுடனேயே இடம்பெற்றது.

இக்கூட்டிணைப்பை ஏற்றுக்கொள்ளாத சாய்ந்தமருதை சேர்ந்த படித்த மக்கள் தங்களுக்கு தனியான உள்ளுராட்சி மன்றமொன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக காலத்திற்கு காலம் வந்த உள்ளூராட்சி அமைச்சர்களை சந்தித்து சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஊடாக கோரிக்கையினை முன்வைத்து வருகன்றனர்.

எமது மக்களின் கோரிக்கையானது இன்னமும் கைகூடாமல் இருந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும். மாநகர சபையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. எனது எண்ணத்தின்படி 2017 ஜூன் மாதத்தின் பின்பே உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறும். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள்கூட 2017 ஆரம்ப பகுதிலேயே தேர்தல் நடைபெறுமென அறிவித்துள்ளார். அடுத்த தேர்தல் நடபெறுவதற்கு முன்னர் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றமொன்றை நிறுவுதல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதுடன் 2015 ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வாழைச்சேனையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் எழுச்சி மாநாட்டின்போது வெளியிடப்பட்ட பத்து அம்மசங்கள் கொண்ட பிரகடனத்தில் சாய்நதமருதுக்கான உள்ளூராட்சி மன்றமொன்றை நிறுவுதல் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே மாதம் ஒன்பதாம் திகதி கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஆட்சிக்கு வயும் பட்சத்தில் சாய்ந்தமருதுக்கென உள்ளுராட்சி மன்றமொன்றை உருவாக்கித் தருவதாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உறுதியளித்தார்.

காரைதீவு, ஆலையடிவேம்பு, லகுகல, இறக்காமம், நாவிதன்வெளி போன்ற பிரதேச சபைகளை ஒப்புநோக்கும்போது சாய்ந்தமருது ஒரு நகர சபையை பெற்றுக்கொள்வதற்கு முற்றிலும் தகுதியானது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமிருக்க முடியாது. ஆகவே, சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உள்ளூராட்சி மன்றமொன்றை காலதாமதமின்றி நிறுவிக்கொடுக்க முஸ்லிம் காங்கிரஸ் முன்வர வேண்டும்" என தெரிவித்தார்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget