அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஜூலை மாத ஒன்று கூடல்
போரத்தின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்டீன் தலைமையில் இறாக்காம் பத்திய
வாங்காமம் ஜி.எம்.எம்.எஸ். வித்தியாலத்தில் நேற்று (19) காலை 10.30 மணியளவில்
நடைபெற்றது.
இதன்போது ஊடகவியலாளர்களின் திறமைகளை அதிகரித்துக் கொள்வதற்கான
பயிற்சிக் கருத்தரங்குகள், களப் பயணங்களை மேற்கொள்வதற்கும்
தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின்
உறுப்பினர்களின் நலன்சார் விடயங்களும் ஆராயப்பட்டது.
அத்தோடு எமது போரத்தின் நலன் கருதி அரச சார்பற்ற நிறுவனங்கள்
நடந்து கொள்ளும் முறை தொடர்பான விரிவான கருத்துக்களை அம்பாறை மாவட்ட அரச
சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ.எல்.எம்.இர்பான் சிறப்புரை யினை
நிகழ்த்தினார்.
மேலும் பாலமுனை "முஹா" வின் ”கடலோரத்து மணல்” கவிதை நூலினை பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
Post a Comment