Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | பணத்துக்காக சான்றிதழ் வழங்கும் கல்வி நிலையங்கள் தொடர்பில் விழிப்படைதல் வேண்டும்!

-எம்..எம்.அஸ்ஹர்-
 நாட்டின் பல பகுதிகளிலும் தனியார் கல்வி நிலையங்களின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில்  மாணவர்கள் சான்றிதழை பெற்றுக் கொள்வதற்காக அதிக பணத்தையும் காலத்தையும் வீண் விரயம் செய்கின்றார்களே தவிர அந்நிறுவனங்கள் மூன்றாம் நிலை கல்விக்கான அரசாங்க அங்கீகாரம் பெற்றுள்ளதா  என்பதை அறிந்து கொள்ள தவறி விடுகின்றனர். இதனால் தமது பாடநெறியினை புர்த்தி செய்த பின்னர் தொழிலுக்காக விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. இவ்விடயத்தில் பெற்றோரும் அக்கறை செலுத்த தவறி விடுகின்றனர்.

இவ்வாறு கல்முனை கல்விக்கும் அபிவிருத்திக்குமான நிலைய நெனசல அறிவக பணிப்பாளர் எஸ்.எம்..ஹாஜா தெரிவித்தார்.

இன்று நாட்டில் மழைக்கு முளைத்த காளனானைப் போல் கண்ட இடமெல்லாம் தனியார் கல்வி நிலையங்கள் உருவாகிக் காணப்படுகின்றன. இந்நிறுவனங்களில் மாணவர்கள் அந்நிறுவனங்களின் கவர்ச்சியான விளம்பரங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர்.

அரசாங்கம் தற்போது நியமனம் வழங்கும் போது வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் அரசாங்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தினூடாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப் படுத்திக் கொண்டே மாணவர்களுக்கு நியமனங்களை வழங்குகின்றது. இந்த வேளையில் அரச அங்கீகாரம் பெறாத நிறுவனங்களில் கல்வியினை தொடர்ந்த மாணவர்கள் நிர்கதியான நிலைக்கு உள்ளாகி ஏமாந்து தமது வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்.

இந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 32 நெனசல அறிவகங்கள் இருந்த போதிலும் கல்முனை கல்விக்கும் அபிவிருத்திக்குமான நிலைய மூலம் முன்னெடுத்துச் செல்லப்படும் கல்முனை நெனசலஅறிவகம்கடந்த காலங்களில் இம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு இந்த காலத்தற்கு பொருத்தமான பாடநெறிகளை அறிமுகப்படுத்தி இம்மாவட்டத்திலுள்ள அதிகமான மாணவர்களை மிகவும் குறைந்த கட்டணத்தில் தமது பாடநெறியினை தொடர்வதற்கும்  அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றது. எமது நிறுவனத்தில் கல்வி கற்ற அதிகமான மாணவர்கள் இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

எமது நிறுவனம் தகவல் தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்பவியல் அமைச்சினால் வழங்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் சிறந்த நெனசலவிற்கான அறிவகங்களின் அங்கீகாரம் சுவர்ண சம்மான விருதினை கல்முனை நெனசல அறிவகம் வென்றுள்ளதுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள அறிவகங்களில் மூன்றாம் நிலைக்கல்வி , தொழிற்கல்வி ஆணைக்குழுவில் ஆணைக்குழுவில் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது அறிவகம் 4500 மாணவர்களை இதுவரை பட்டப்படிப்பு பெற்று வெளியேற்றியுள்ளது.

.பொ..உயர்தர பரீட்சையில் இரண்டு பாடங்களில் மட்டும் சித்தியெய்தி வெளிவாரி பட்டப்படிப்பற்காக திண்டாடிய மாணவர்கள் பலருக்கு எமது நிறுவனத்தின் மூலம் பட்டப்படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டதுடன் , .பொ..சாதாரண தரப்பரீட்சையில் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு விண்ணப்பக்கும் மாணவர்களுக்கு இலவசமாக கருத்தரங்கு முகாம்களையும் நடாத்தி வருகின்றது.

இன்று நவீன தொழில் நுட்பம் அதிகமா ஆதிக்கும் நிலையில் பாடசாலையில் க்வி கற்கும் மாணவர்களும் பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களும் இளைஞர்களும் யுவதிகளும்  சமூக வலையமைப்புகளில் வீழந்து சீரழியும் மாணவர்களை அதிலிருந்து மீட்பதற்காக பெற்றோர்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.என்று தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் கல்முனை கல்விக்கும் அபிவிருத்திக்குமான நிலைய செயலாளர் சட்டத்தரணி யு.எம்.நிஸார் ,பணிப்பாளர் சபையைச் சேர்ந்த எம்.முஸ்தகீன் மௌலானா , மௌலவி இஸட்.எம்.நிஸார் , ஏ.எல்.ஏ.மஜீட் உள்ளிட்ட விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget