Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | சவால் ஏற்கத் துணிந்த அரசியல் வாதி ஆண்மகன்கள் கல்முனையில் உள்ளனரா??

ஒரு சவால் விடுகின்றேன். முடிந்தால் இந்த வரைபடத்தை மாற்றியமைத்து காட்டுங்கள் பார்ப்பம்.? - எஸ்.எல்.றியாஸ் 

இங்கு பதிவிடப்பட்டருப்பதுதான் கல்முனை மாநகரத்தின் இன அடிப்படையிலான நில விகிதாசாரம் பற்றிய அம்பாரை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் காணப்படும் உத்தியோக பூர்வ வரைபடம்.
இதில் கல்முனை மாநகரத்தில் முஸ்லிம்களுக்கு 37 சதவீத நிலமும் தமிழர்களுக்கு 63 சதவீத நிலமும் காணப்படுவதாக இந்த வரைபடம் சொல்கிறது. 


இந்த விடயம் நிச்சயமாக பிரதேச செயலாளருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் இடம்பெற்றிருக்காது. தனக்கு தெரியாமல் நடந்திருக்கின்றது என்று அரசியல்வாதி சொன்னால் அதுதான் இந்த நூற்றாண்டின் நகைச்சுவையாக இருக்கும்.

தசாப்தங்கள் பல கடந்தும் முஸ்லிம் காங்கிரசே கல்முனையினை நிரவாகித்து வருகின்றது. கல்முனையின் புவியியல் நிலைமை விளங்காமல் கோமா நிலையிலா ஆட்சி நடத்தினீர்கள். இந்த நிலை தொடர்ந்தால் தற்போது 500 மில்லியனில் நடைபெறவிருக்கும் அபிவிருத்தி யாரை சென்றடையும்.
அப்போதைய பிரதேச செயராளரின் அனுமதியின்றி இது உத்தியோக பூர்வமான வரைபடமாக அங்கீகாரம் பெற்றிருக்காது.

கரையோர மாவட்டம் கிடைக்காவிட்டால் பதவி விலகுவோம் என்று சொல்லும் அரசியல் வாதியிடம் ஒரு சவால் விடுகின்றேன். முடிந்தால் இந்த வரைபடத்தை மாற்றியமைத்து காட்டுங்கள் பார்ப்பம்.?

அம்பாரை மாவட்டத்தில் 3 பாராளுமன்ற பிரதிநிதித்தவம். 2 பிரதி அமைச்சுப்பதவி மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் கூட உள்ள கட்சியினால் இந்த வரைபடத்தினை மாற்றி கல்முனை முஸ்லிம்களின் உரிமையினை பெற்றுத்தர முடியுமா?

இதற்காக தமது பதவிகளை அடமானம் வைத்து  போராட உங்களுக்கு தைரியம் இருக்கின்றதா? அல்லது முடிந்தால் இந்த வரைபடம் மாற்றப்படாவிட்டால் பதவி துறப்போன் என்று ஒரு அறிக்கையாவது விடமுடியுமா?
இதை வென்று தரக்கூடிய ஒரு அரசியல்வாதி ஆண்மகன் இருந்தால முன்வாருங்கள்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget