Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

Tech | அனைவரும் பயன்படுத்த, அதிரடியாய் களமிறங்கும் "Blackberry"

செல்போன் சந்தையில் உயர்தரமானது என்ற முத்திரையுடன் விற்பனையில் முன்னணியில் இருந்த பிளாக்பெர்ரி நிறுவனம் அண்ட்ரோய்ட் மற்றும் அப்பிள் இயங்குதள போட்டியினால் பெரும் சரிவைச் சந்தித்தது.

பின்னர் கூகுள் நிறுவன ஆதரவுடன் அண்ட்ரோய்ட் இயங்குதள பிளாக்பெர்ரி செல்போனை அறிமுகம் செய்தது.

இருப்பினும், அதிகபட்ச விலையால் செல்போன் சந்தையில் எதிர்பார்த்த விற்பனை இலக்கை அடைய முடியவில்லை.

இந்நிலையில், நடுத்தர மக்களின் ஆதரவைப் பெறும் வகையிலான விலையில் புதிதாக இரு வடிவங்களில் அண்ட்ரோய்ட் இயங்குதள ஸ்மார்ட் போன்களை ஜூலை மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் சென் தெரிவித்துள்ளார்.

இதற்கு பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அண்ட்ரோய்ட் இயங்குதளத்தை உருவாக்கிய கூகுள் நிறுவனம், தனது நிறுவனத்தின் பெயரில் சொந்தமாக செல்போன்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளது. இதுவரையில் தனது அண்ட்ரோய்ட் இயங்குதளம் உள்ளிட்ட சொப்ட்வெயார்களை சாம்சங், ஜியோமி உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கு அளித்து வந்தது. (ஆனால் கூகுள் மற்றும் நெக்ஸஸ் நிறுவனம் இணைந்து கூகுள்-நெக்ஸஸ் என்ற செல்போன்களைத் தயாரித்து வருகிறது.)

இந்நிலையில், உலகம் முழுவதும் 80 வீதம் பேர் அண்ட்ரோய்ட் இயங்குதள செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் இந்த வளர்ச்சியால் பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டன.

இந்நிலையில், இந்த அண்ட்ரோய்ட் இயங்குதளம் மற்றும் அது சார்ந்த மென்பொருட்களின் புதிய அப்டேட்களுக்கு கூகுள் நிறுவனம் அந்தந்த செல்போன் தயாரிப்பு நிறுவனங்களைச் சார்ந்தே இருக்க வேண்டிய சிக்கல் இருந்து வருகிறது.

ஆனால், அப்பிள் ஐ போன் நிறுவனத்திற்கு இந்த சிக்கல் இல்லை. ஏனென்றால், இந்நிறுவனம் சொப்ட்வெயார் (ஆப்பிள் இயங்குதளம்) மற்றும் ஹார்ட்வெயார் பாகங்களை சொந்தமாகவே தயாரித்து செல்போன்களை வெளியிடுகிறது.

எனவே, இதைக் கருத்திற்கொண்டு முழுவதுமாக கூகுள் நிறுவனம் சார்பில், கூகுள் பிராண்ட் பெயரிலேயே சொப்ட்வெயார் மற்றும் ஹார்ட்வெயார்களுடன் செல்போன் தயாரித்து இந்த ஆண்டு இறுதியில் வெளியிட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget