Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | தனியான உள்ளூராட்சி சபையை வலியுறுத்தி சாய்ந்தமருது அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் நாளை குத்பாவும், விசேட துஆ பிரார்த்தனையும்

-யூ.கே.காலீத்தீன்-
நீண்ட நாள் கோரிக்கையான சாய்ந்தமருத்துக்கான தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கை, கடந்த பொதுத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தரப்பால் துரும்புச்சீட்டாகப் பயன்படுத்தப்பட்டு, பிரதமரை கல்முனைக்கு அழைத்துவந்து அவரது வாயாலும் "சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளுராட்சி சபை உருவாக்கித் தரப்படும்" என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில், ஆண்டுகள் கடந்து வருகிறதே தவிர, இதற்கான முஸ்தீபுகள் இதுவரை சோபை இழந்த நிலையில் காணப்படுவதாலும், மீதமாயிருந்த கல்முனை மாநகரசபை உட்பட ஏனைய உள்ளூராட்சி சபைகளும் தற்போழுது கலைக்கப்பட்டுள்ள நிலையிலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயங்கள் பூர்த்தியடைய உள்ள நிலையிலும், 2017 முதல்காலாண்டுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியான நிலையிலும், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாஸல் நம்பிக்கையாளர் சபை நிர்வாகக் கூட்டம் இது தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று (20) சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போது இவ் உள்ளூராட்சி மன்ற விவகாரம் விரிவாக ஆராயப்பட்டு, நாளை (22) வெள்ளிக்கிழமை, சாய்ந்தமருது - மாளிகைக்காடு பகுதியில் உள்ள 6 ஜும்மா பள்ளிவாசல்களிலும் உள்ளூராட்சி மன்ற விவகாரம் தொடர்பாக மக்களை விழிப்படையச் செய்வதுடன், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் விதத்தில் குத்பா பிரசங்கங்களை மேற்கொள்வதெனவும், இதன் நிறைவேற்றத்துக்காக இறைவனை மன்றாடும்  விதத்திலான விசேட துஆ பிரார்த்தனைகளையும் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டதாக சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.ஐ. அப்துல் மஜீட் தெரிவித்தார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget