மழ்ஹறு ஷம்ஸ் வித்தியாலயத்தில் ”செஸ்டோ” அமைப்பினால் குடி நீர் குழாய் புனரமைப்பு வேலைத் திட்டம்
கல்முனை சாஹிராக் கல்லூரியில் 99 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய
மாணவர் அமைப்பான ”செஸ்டோ” ZESDO (Zairians’ Education & Social
Development Organization) அமைப்பானது, 2016 நடப்பு ஆண்டு தலைவர் எஸ்.எம்.
ஆரீஸ் அக்பர் (இலங்கை மின்சார சபை, மின் அத்தியட்சகர்) தலைமையில்
இவ்வருடத்துக்கான முக்கிய வேலைத்திட்டமாக, இனம்காணப்பட்ட பின்தங்கிய
பாடசாலைகளுக்கு உதவுதல் போன்ர இன்னும் பலவகையான வேலைத்திட்டத்தின்
அடிப்படையில் இயங்கி வருகின்றது.
சாய்ந்தமருது மழ்ஹறு ஷம்ஸ் வித்தியாலய அதிபரின் வேண்டுகோளின்
அடிப்படையில் இப்பாடசாலைக்காக குடிநீர், குழாய் புனருத்தாபன
வேலைத்திட்டம் (Drinking Water and Wash Basin Scheme) ஒன்று
நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வு கல்லூரியில் அதிபர்
எம்.எஸ்.எம்.இம்தியாஸ் மதனியின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த வேலைத்திட்டம் மாணவர்கள் பாவனைக்காக அதிபரிடம் ”செஸ்டோ” தலைவர் மற்றும் அங்கத்தவர்களினால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ”செஸ்டோ” அமைப்பின் நடப்பாண்டு தலைவர் எஸ்.எம்.
ஆரீஸ் அக்பர், செயலாளர் சதாத், பொருளாளர் இர்ஷாத், அமைப்பின் முன்னாள்
தலைவரும் பிராந்திய மின் பொறியியலாளருமான எம்.ஆர்.எம்.பர்ஹான், பாடசாலையின்
பி.எஸ்.ஐ.இணைப்பாளர் அன்வர் சித்தீக், அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலை
அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உட்பட ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து
சிறப்பித்தனர்.
Post a Comment