பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்
சங்க சம்மேளனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழகங்கள்
மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களை
உள்ளடக்கிய அடையாள வேலைநிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
குறித்த அடையாள வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒலுவில் வளாக
முற்றலில் 2016-07-13ஆம் திகதியும் இன்று 14ம் திகதியும் வேலைநிறுத்த
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர் சங்கத்தின் தலைவர் வை.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இவ்
அடையாள வேலைநிறுத்தத்தில், அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க
சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு
விளக்கமளிக்கப்பட்டபோது, பின்வரும் கோரிக்கைகள் அவர்களால்
முன்வைக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும்
குறிப்பிட்டதோர் பகுதியினருக்கு மாத்திம் சம்பள மற்றும் கொடுப்பனவுகளை
அதிகரித்துள்ளதாகவும், குறித்த அதிகரிப்பை கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்க,
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சருடன்
பேசியபோது அவர்கள் குறித்த விடயத்தை ஏற்றுக்கொண்டதாகவும், இது தொடர்பில்
இதுவரையும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும்,
அவற்றை உடனடியாக வழங்க கோரியும்,
1. MCA கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும்.
2. UPF/EPF மற்றும் ஓய்வூதியத்தை கொடுப்பனவு பங்களிப்பு செய்தல்.
3. ஆக்கத்திறனுடைய ஓர் ஓய்வூதிய திட்டத்தை வழங்குதல்.
4. 60 வயதுக்கு ஓய்வூதிய வயதை மறுசீரமைப்பு செய்தல்.
5. 2016 ஆம் ஆண்டின் அரச சம்பள திட்டத்துக்கு சமமான சுற்றறிக்கையை வெளியிடுதல்.
போன்ற கோரிக்கைகள் உள்ளடக்கியதாகவும், இவர்களது அடையாள வேலைநிறுத்தம் இடம் பெறுவதாக குறிப்பிட்டார்.
இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போனால்,
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட, அனைத்துப்
பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளதாகவும் இங்கு
பிரஸ்தாபிக்கப்பட்டது.
மேற்படி சம்மேளனத்தின் அனுசரணையில் கடந்த 2016-03-31 ஆம்
திகதியும் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்
இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment