-எம்.வை.அமீர்-
இலங்கையில்
உள்ள பல்கலைக்கழகங்களில் களனி பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து தென்கிழக்குப்
பல்கலைக்கழகம் ஆங்கில மொழிகற்பித்தலில் விஷேட பட்டப்படிப்பை அண்மையில் ஆரம்பித்து
வைத்தது.
பல்கலைக்கழகத்தின்
ஆங்கில மொழிப்பிரிவின் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்
ஆரம்ப நிகழ்வில் தென்கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம்
பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நிகழ்வுக்கு
விஷேட அதிதிகளாக பொறியியல், கலை மற்றும் வர்த்தக பிரிவு பீடாதிபதிகள்
கலந்துகொண்டதுடன் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் உள்ளிட்ட விரிவுரையாளர்களும்
துறைசார்ந்தோரும் கலந்து கொண்டனர்.
குறித்த
பாடநெறிக்கு இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் உள்வாரி மாணவர்களில்
போட்டிப்பரீட்சை மூலம் தெரிவாவோர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment