நிரந்தர சமாதானத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தலில்
ஊடகங்களின் வகிபங்கு எனும் தொனிப்பொருளில், சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியம்
ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாட்களைக்கொண்ட அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான வதிவிட செயலமைவு நேற்று (30) கல்முனை சூப்பர்ஸ்டார் வரவேற்பு மண்டபத்தில் குறித்த நிறுவனத்தின் சிரேஷ்ட
நிகழ்ச்சித்திட்ட அதிகாரி குகதாசன் ஐங்கரன் தலைமையில் ஆரம்பமானது.
செயலமர்வின் முதல்நாளில் நாட்டில் சமாதானத்தியும் நல்லிணக்கத்தியும் நிலைநாட்டுவதற்கு ஊடகங்கள் வகிக்கக்கூடிய பங்குகள் பற்றியும் அதற்கான அவசியம் பற்றியும் பல்வேறு தலைப்புக்களில் ஆராயப்பட்டதுடன் நாட்டில் நிரந்தர சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் உள்ளூரிலும் சர்வதேசமும் முன்வைக்கும் தீர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இறுதி நாளான இன்று (31)ம் திகதி விரிவுரையாளராக இலங்கை
இதழியல் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.ரி.சிறிவித்திரன் விரிவுரை
நிகழ்தினார், சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் சிரேஸ்ட
நிகழ்சிதிட்ட உத்தியோகத்தர் சட்டத்தரணி கே.ஐங்கரன் மற்றும்
நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி சப்றா ஸாஹிட் ஆகியோர் கலந்து
கொண்டு விரிவுரைகளை நெறிப்படுத்தினார்.
Post a Comment