-எம்.எஸ்.எம்.ஸாஹிர்-
வகவம் வருடாந்த கலைவிழாவும், கௌரவிப்பும் சிறப்பு கவியரங்கும் இன்று(17) ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளவத்தையிலுள்ள தமிழ் சங்கத்தில்வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது இரண்டாண்டு கால வகவ நிகழ்வுகளின் சுவடுகள் அடங்கிய“வகவப் பதிவுகள்” என்ற நூலும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில், ”காவ்யாபிமானி” விருது பெற்ற நவமணி பத்திரிகையின் சிரேஷ்ட ஆசிரியர் பீட உறுப்பினரான கலைவாதி கலீல் பொன்னாடைபோத்தி மாலை அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் கலாசாரஅலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அனூஷா கோகுள பிரனாந்து விசேடஅதிதியாக கலந்துகொண்டார்.
“சிங்கள - தமிழ்க்கவிதைகள் உறவுகள்” என்னும் தலைப்பில் மொழி பெயர்ப்பாளர் - சிங்கள -தமிழ் இலக்கிய செயற்பாட்டாளர் ஹேமச்சந்திரன பதிரன தமிழ் மொழியில்சிறப்புரையும் வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன்தலைமையுரையும் வகவம் ஸ்தாபகத் தலைவர் டாக்டர் தாஸிம்அஹமது கௌரவிப்புஉரையும் நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வில் “மானுடம் பாடும் கவிதைகள்” எனும் கவிதைத்தொகுப்பிற்காக, அந்த கவிதைத் தொகுப்பாளர்களில் ஒருவரான மேமன் கவிக்கும் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
இதன் போது மேமன் கவியின் தலைமையில சிறப்பு கவியரங்கும்நடைபெற்றது.

Post a Comment