Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | நிந்தவூர் வீதி அபிவிருத்தியில் ஊழலாம், இதுபற்றி அரசு ஆராய வேண்டும் என்கிறது உலமா கட்சி

நிந்தவூரில் தற்போது நடைபெற்று வரும் வீதி அபிவிருத்தி வேலைகளில் பெரும் ஊழல்கள் நடை பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுவதால் இத பற்றி அரசு ஆராய வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,

தற்போது நிந்தவூரின் மூன்றாம் குறுக்குத் தெரு பாதை புனரமைப்பு வேலை நடைபெற்று வருகிறது. அதற்காக 48 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளதாகவும் இந்த அபிவிருத்தி வேலையில் பல ஊழல் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த வீதி அபிவிருத்தி வேலைகள் மக்கள் பாவனைக்கு தரம் அற்ற நிலையில் புனரமைப்பு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது என அறிய முடிகிறது.

இது சம்மந்தமாக நிந்தவூர் அபிவிருத்தி குழு ௧வனம் செலுத்தாமல் இருப்பதாகவும் பொது மக்கள் உலமா கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இது விடயமாக நிந்தவூர் மக்கள் பலதடவை அரச அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கவலையுடன் மக்கள் தெரிவிக்கின்றனர்

நிந்தவூரில் பல வீதிகள் மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் இருக்கும் போது மக்கள் பாவனையற்ற நிலையில் உள்ள விவாசய பிரதேசமான செங்கற்படை வயல் காணி பிரதேச  கொங்கிரிட் வீதியை மீண்டும் புனரமைப்பு செய்யவுள்ளதாக அறிய முடிகிறது. இதன் உள் நோக்கம் என்ன என மக்கள் கேள்வி எழுப்புவதை அரசாங்கம் அசட்டை செய்யக்கூடாது என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget