-ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைதீன்-
கல்முனைப் பிராந்தியத்தில் கடினபந்து கிரிக்கெட் விளையாட்டின் தாய்க் கழகமான சாய்ந்தமருது பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவையொட்டி சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முழு அனுசரணையில் இடம்பெறும் ரீ-10 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று (16) சனிக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரியன் மைதானத்தில் இடம்பெற்றது.
பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் வங்கியலாளர் எம்.எம்.மசூத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜ், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.
ஆரம்ப போட்டியில் சம்மாந்துறை முபோ விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனை பிறைட் பியுச்சர் விளையாட்டுக் கழகமும், கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சம்மாந்துறை எஸ்.எஸ்.சீ விளையாட்டுக் கழகமும் மோதியது.
இதில் சம்மாந்துறை முபோ விளையாட்டுக் கழகம் 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் மற்றைய போட்டியில் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் 4 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.

Post a Comment