அம்பாறை, பொத்துவில் உல்லை
பிரதேசத்தில் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் 116 மில்லியன் ரூபா
செலவில் நிர்மாணிக்கப்பட்ட 4 குழாய்க் கிணறுகள் மற்றும் அதற்கு தேவையான
நீர்ப் பம்பிகள், நீர்க் குழாய்கள், நீர் உந்தும் நிலையம், நீர்
சுத்திகரிப்பு நிலையத்தில் 5 நீர் வடிகட்டிகள் போன்றவற்றை சிறி லங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கள்
அமைச்சருமான றஊப் ஹக்கீம் இன்று (16) திறந்து வைத்தார்.
பொத்துவில்
பிரதேச மக்களின் நலன் கருதி அமைச்சர் றஊப் ஹக்கீமினால் முன்னெடுக்கப்பட்ட
இந்த 4 குழாய்க் கிணறுகளின் மூலம் ஒரு நாளைக்கு 2200 கனமீற்றர் நீரை
பொத்துவில் பிரதேச மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த
பொத்துவில் உல்லை நீர் வழங்கள் திட்டமானது மெரிக்கா அரசின் நிதியுதவியின்
கீழ் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நிர்மாணிக்கப்பட்டு
திறந்துவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment