Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

Sports | பொத்துவிலில் இடம்பெற்ற "கல்விக்காக ஓடுவோம்" அரை மரத்தானில் ஜேர்மன் பிரஜை சம்பியனாகத் தெரிவு

-எம்.ஐ,எம்.அஸ்ஹர்-
சர்வதேச ரீதியில் உல்லாச பயணத்துறைக்கு பெயர்பெற்ற பொத்துவில்அறுகம்பை பிரதேசத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான அரை மரதன் ஓட்டப் போட்டி  கடந்த  ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமானது.

அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியம் அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் , பொத்துவில் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பொலிஸார் ஆகியோரின்  ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்திருந்த  கல்விக்காக ஓடுவோம்எனும் தொனிப்பொருளில் அமைந்த அரை மரதன் ஓட்டப் போட்டி சின்ன உல்லை அல் அக்ஸா வித்தியாலயத்திற்கு முன்னால் ஆரம்பமாகி , பொத்துவில் பாணம பிரதான வீதியினூடாக , பசறைச் சேனையை அடைந்து பின்னர் ஹிஜ்ரா வீதியினூடாக சென்று அங்கிருந்து மீண்டும் பொத்துவில் பாணம பிரதான வீதியினூடாக , ஊரணி வளைவை அடைந்து  இறுதியாக போட்டி ஆரம்பிக்கப்பட்ட சின்ன உல்லை அல் அக்ஸா வித்தியாலயத்திற்கு முன்னால் நிறைவுபெற்றது,

முதலாம் இடத்தை ஜேர்மன் நாட்டைச்  செர்ந்த மாக்கஸ் கொடரும் . இரண்டாம் இடத்தை இலங்கை இரானுவத்தைச் செர்ந்த பியால் திஸாநாயகவும் . மூன்றாம் இடத்தை கெ. ஸ்ரீதரன்  பெற்றுக் கொண்டனர்.

நாடு தழுநிய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மேற்படி மரதன் ஓட்டப் போட்டியில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் , உள்நாட்டு மரதன் ஓட்ட வீர வீராங்கனைகள் , உயர்தர வகுப்பு மாணவ மாணவிகள் என பலரும் இப் போட்டியில் கலந்து கொண்டதுடன் தூரத்தை ஒடி முடித்த அனைவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

போட்டி நிகழ்வில்  இலங்கை கிறிக்கட் அணியைச் சேர்ந்த  , சம்பிக்க பிரசாத் , தனுஸ்க குணதிலக . திருன  பெர்ணாந்து  . பொத்துவில் பிரதேசத்தின் பெயரை உலகறியச் செய்த ஓட்ட வீர் அஸ்றப் லத்தீப் ஆகியோர் கலந்து கொண்டு சிறிது தூரம் மரதன் ஓட்ட வீர வீராங்கனைகளுடன் மரதன் ஓட்டப் போட்டியிலும் கலந்தும் கொண்டனர்.

பரிசளிப்ப நிகழ்வில் பொத்துவுில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸர்ரிப் . டாக்டர் ரி,எல்.மனாப் ,சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ,எம்.இஸ்ஸதீன். பொத்துவுில் உலமா சபை தலைவர் ,எல்.ஆதம்லெவ்வை.முன்னாள் பிரதெச சபை தவிசாளர் எம்.எஸ்ஏ,வாஸித் . சுற்றுலா சம்மௌனத் தலைவர் ,எம்.ஜெவ்பர் ,பிரதெச சபை உறுப்பினர் ,பி.பதுரு்கான்
அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எம்.எச்.எம்.ஜமாஹிம் , செயலாளர் டாக்டர் இஸட்.எம்.ஹாஜித் , பொருளாளர் .அப்துல்லாஹ் , ஆலோசகர் எம்.எஸ்..நஸார் , அமைப்பாளர் .ஜீ.அமீர் அலி , உறுப்பினரான .ஜி.அமானுள்ளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget