அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக எந்த ஒரு பிரதான கட்சியின் வேட்பாளாராகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் பெண்மணியாகிறார் ஹிலரி.
ஒவ்வொரு மாநிலமாக பதிவான வாக்குகளை சரிபார்த்தபின், பிலடெல்ஃபியாவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலரி கிளிண்டனை, தங்கள் கட்சியின் வேட்பாளராக அதிகாரபூர்வமாக நியமித்தனர்.
ஹிலரிக்கு எதிராகப் போட்டியிட்டு தோற்றுப்போன பெர்னி சாண்டர்ஸின் ஆதரவாளர்களில் சிலர், சாண்டர்ஸ் ஹிலரிக்கு ஆதரவளித்து கரகோஷம் எழுப்புமாறு மாநாட்டில் கலந்து கொண்டவர்களைக் கோரியபோது, மாநாட்டு மண்டபத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஹிலரியின் கணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான, பில் கிளிண்டன், ஹிலரி மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவ எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார் என்று காட்டும் வகையில், அவரை தான் காதலித்து மணந்த கட்டத்திலிருந்து சில உதாரணங்களை சுட்டிக்காட்டினார்.

Post a Comment