Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | தீர்வு கிடைக்கும்வரை தொடர் போராட்டம் - தெ.கி.ப. தொழிற்சங்கத் தலைவர் வை.முபாறக்


 -எம்.வை.அமீர்-
அரசாங்கம் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் குறிப்பிட்டதோர் பகுதியினருக்கு மாத்திம் சம்பள மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்துள்ளதாகவும், குறித்த அதிகரிப்பை கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சருடன் பேசியபோது அவர்கள் குறித்த விடயத்தை ஏற்றுக்கொண்டதாகவும், இது தொடர்பில் இதுவரையும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும், அவற்றை உடனடியாக வழங்கக் கோரியும்
1.       MCA கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும்.
2.       UPF/EPF மற்றும் ஓய்வூதியத்தை கொடுப்பனவுக்கு பங்களிப்புச்செய்தல்.
3.       ஆக்கத்திறனுடைய ஓர் ஓய்வூதிய திட்டத்தை வழங்குதல்.
4.       60 வயதுக்கு ஓய்வூதிய வயதை மறுசீரமைப்பு செய்தல்.
5.       2016 ஆம் ஆண்டின் அரச சம்பள திட்டத்துக்கு சமமான சுற்றறிக்கையை வெளியிடுதல். போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் இன்றுமுதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளதாகவும் தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசிடமிருந்து நல்ல சமிக்கைகள் கிடைக்கும்வரை போராட்டம் 2016-07-27 முதல் தொடர்வதாகவும்  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிற்சங்க தலைவர் வை.முபாறக் தெரிவித்தார்.
குறித்த வேலைநிறுத்தத்தை முன்னிட்டு கடந்த 2016-03-31 ஆம் திகதியும் 2016-07-13 ஆம் திகதியும் 14ஆம் திகதியும்   அடையாள வேலைநிறுத்தத்தில்  தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget