விரைவில், தீகவாபி பிரதேசத்தில் பிரசவ வைத்தியப் பிரிவு ஒன்று
திறக்கப்பட இருப்பதாகவும், அதற்கான உபகரணங்களை அயல் பிரதேசங்களிலிருந்து
திரட்டும் நடவடிக்கையில்
சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு இன்று (11) ஒரு குளுவினர் வருகை தந்ததாகவும், அவர்கள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலிருக்கும் ஸ்கேன்னர் இயந்திரமொன்றை கொண்டு செல்ல முயற்சித்ததாகவும் நேரில் கண்டவர்கள் கலசம்.கொம் இற்கு தெரிவித்தனர்.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு இன்று (11) ஒரு குளுவினர் வருகை தந்ததாகவும், அவர்கள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலிருக்கும் ஸ்கேன்னர் இயந்திரமொன்றை கொண்டு செல்ல முயற்சித்ததாகவும் நேரில் கண்டவர்கள் கலசம்.கொம் இற்கு தெரிவித்தனர்.
இது தொடர்பாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். பாரூக் அவர்களை கலசம்.கொம் தொடர்புகொண்டு வினவியது.
அதன்போது கருத்துத் தெரிவித்த அவர்.....
மேற்கூறப்பட்டது போன்ற ஒரு தகவல் தமக்கும் கிடைத்ததாகவும், குறித்த சம்பவம் இடம்பெறும்போது தாம் வேறு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாகவும், சம்பவத்தை கேள்விப்பட்ட மாத்திரத்தில் அலுவலகத்துக்கு விரைந்து வந்ததாகவும், அங்கு விசாரித்தபோது சரக்கிருப்புப் பரிசோதனை (inventory checking) க்கான குழு வருகைதந்ததாக அறியக்கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
மேற்கூறப்பட்டதுபோல் ஒரு ஸ்கேன் இயந்திரம் உள்ளதா என வினவியதற்கு
"ஆம்" அதன்மூலமாக தான் கற்பிணித்தாய்மார்களை தேவைக்கேற்ப பரிசோதிப்பதாகவும் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும் சாய்ந்தமருதை பொறுத்தவரை இவ்வாறான துரோகத்தனங்கள் புதிதல்ல.
அண்மையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியாகக் கிளையை கல்முனையில் இருந்து கொண்டுசெல்ல விடமாட்டோம் என்று குறுக்கும், நெடுக்குமாக அறிக்கைகள் விட்ட நமது பிராந்திய அரசியல் தலைமைகள், இன்று, அது அம்பாறைக்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர் வாய்மூடி மௌனிகளாக உள்ளனர்.
அதுபோல், இதன் பின்னணியிலும் சில அரசியல் மறை கரங்கள் செயல்படுகின்றனவா? என்று மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.
மக்கள் இப்பொழுது விழிப்படைந்துள்ளனர். "கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்யாமல்" நமது அரசியல் தலைமைகள் இது விடயமாக விழிப்படைந்து "வெள்ளம் வருமுன்னர் அணை கட்டுவார்களா?"
Post a Comment