-யூ.கே. காலித்தீன்-
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை ஊடகங்களிலும் முக நூல்களிலும் முன்னுக்கு பின் முரணாக வெளியிடுகின்றனர் என சாய்ந்தமருது - மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபையின் அல்-ஹாஜ் எம்.வை. ஹனிபா தெரிவித்தார்.
இச் சந்திப்பு தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்
"சாய்ந்தமருது - மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபையினர் நேற்று முந்திய தினம் (09) ம் திகதி உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களை சாய்ந்தமருது - மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபையின் 18 பேர் கொண்ட குழுவினர் எனது தலைமையில் அமைச்சரின் அலுவலகத்தில் வைத்து சுயாதீனமான முறையில் சந்தித்து மிக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை தொடர்பான கோவையினை செய்வதற்கென்று அமைச்சரினால் பிரத்தியேக அதிகாரி ஒருவரை நியமித்து துரித கதியில் உள்ளுராட்சி சபைக்குரிய ஒழுங்குகளை செய்யுமாறு அமைச்சரினால் பணிக்கப்பட்டது.
மேலும் இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் பைசர் முஸ்தபா,
சாய்ந்தமருது உள்ளுராட்சி தொடர்பாக அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், ரிசாட் வதியுத்தீன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இன்ஷாஅழ்ழாஹ் கூடிய விரைவில் நிறைவேறக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அன்றய தினம் மக்கள் சந்திப்பு தினமாக இருந்த படியாலும் எங்களை கெளரவித்து எங்களுக்கான பிரத்தியேக நேரத்தினையும் ஒதுக்கி உபசரித்தனிப்பினார். அது மாத்திரமல்லாது மிக விரைவில் உங்களது பிரதேசத்திற்கு வருவதாகவும் வாக்குரிதியளித்தார்" என்று தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.
Post a Comment