-ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
அதிமேதகு ஐனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அவர்களின்
நல்லாட்சி சிந்தனையில்
உருவான 'பசுமைப்
புரட்சி'- 'நஞ்சற்ற உணவு உற்பத்தியின் மூலம்
ஆரோக்கியமான சமூகத்தைக் காண்போம்' திட்டத்தின் கீழ்
நிந்தவுர் ஆதார
வைத்தியசாலையில் உருவாக்கப்பட்ட மரக்கறித் தோட்டத்தின் அறுவடை.
நிகழ்வு
இடம் பெற்றது.
வைத்திய அத்தியேட்சகர் திருமதி.
சஹிலா இஸ்ஸதீன்
தலைமையில் இடம்
பெற்ற இவ்வறுவடை
நிகழ்வில் கல்முனைப்
பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளர்
ஏ.அலாவுதீன்,
பிரதிப் பிராந்திய
சுகாதார சேவைகள்
பணிப்பாளர் ஏ.இஸ்ஸதீன், அம்பாரை மாவட்ட
உதவி விவசாயப்
பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ்,
விவசாய போதனாசிரியர்
ஏ.டபிள்யு.முகம்மட் றம்சின்
உள்ளிட்ட உயரதிகாரிகள்
பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அறுவடையைத் தொடர்ந்து வைத்தியசாலைக்
கேட்போர் கூடத்தில்
இது தொடர்பான
விளிப்புணர்வு கருத்தரங்கொண்றும் இடம் பெற்றது.
இதில் உரையாற்றிய வைத்திய அத்தியேட்சகர் திருமதி.சஹிலா இஸ்ஸதீன் 'அதிமேதகு ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சிந்தனையில் உருவான பசுமைப் புரட்சியின் மூலம் இயற்கையான பசளைகளைப் பயன்படுத்தி, நஞ்சற்ற உணவு வகைகளை உற்பத்தி செய்து சாப்பிடுவதன் மூலம் நாம் நல்ல ஆரோக்கியமுள்ள சுகதேகிகளாக வாழமுடியும் என்பதையும், அதன் மூலம் சிறந்த ஆரோக்கியமுள்ள சமூகத்தைக் கட்டி வளர்க்கலாம் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்ட
அனைவருக்கும் இத்தோட்டத்தில் உருவாக்கப்பட்ட
இயற்கை மூலிகைகள்,
நஞ்சற்ற மரக்கறி
வகைகளால் தயாரிக்கப்பட்ட
இலைக்கஞ்சி பானமும் வழங்கப்பட்டது.
இறுதியில் சங்கைக்குரிய உலமா
இப்றாகீம் மௌலவி
அவர்களினால் ஐனாதிபதியிற்கு நல்லாசி வேண்டியும், அவர்களின்
நல்ல சிந்தனைகளில்
உருவான திட்டங்களால்
நாட்டு மக்கள்
அனைவரும் நன்மையடைய
வேண்டியும் விசேட துவாப் பிரார்த்தனையொன்றும் இடம் பெற்றது.
Post a Comment