Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் இரத்ததான முகாம்!

-எஸ்.எம்.எம்.றம்ஸான் , எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு  மாற்றத்திற்கான பங்காளிகளின் அமைப்பின் ஏற்பாட்டில்  சாய்ந்தமருது சுகாதார நிலையத்தில் நேற்று (20) சனிக்கிழமை இரத்ததான முகாமொன்று  இடம்பெற்றது.

கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பங்கேற்றலுடன்  சாய்ந்தமருதின் பல்வேறு இளைஞர், சமூக அமைப்புகளின் பங்களிப்பில் இடம்பெற்ற மேற்படி இரத்ததான நிகழ்வில்  60 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள்இரத்ததானம் வழங்கினார்கள்.

கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.பி.காஞ்சனா செனவிரெட்ன உள்ளிட்ட வைத்தியசாலை தாதி உத்தியோஸ்தர்களும் இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget