Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | குடும்ப வன்முறை, சிறுவர், முதியோர் உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு.

-.எல்..றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின்  அனுசரணையிலான 'குடும்ப வன்முறை, சிறுவர், முதியோர் உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு' நேற்று (20) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும், நிந்தவூர் நலன்புரி அமைப்பின் தலைவருமான எம்.எச்.யாக்கூப் ஹசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் அதிதியாகக் கலந்து கொண்டார்.

சிரேஷ்ட சட்டத்தரணிகளான யூ.எல்.லியாகத் அலி, .எம்.நசீல், அமீறுல் அன்சார் மௌலானா, எம்.எம்.முஜீப் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'குடும்ப வன்முறை, சிறுவர் உரிமைகள், முதியோர் உரிமைகள் என்றால் என்ன?, இவைகள் எவ்வாறு? யாரால் தோற்றுவிக்கப்படுகின்றன? இவற்றால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் எவை?, இவற்றுக்கான அதிகபட்ச தண்டனை யாது? இக்குற்றச் செயல்களற்ற ஒரு சமூதாயத்தை எவ்வாறு உருவாக்குவது? போன்ற பல்வேறு சட்டப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான அடிப்படை அறிவை சமூகத்தில் வாழும் மக்கள் யாவரும் அறிந்திருக்க வேண்டும்' என்று சிரேஷ்ட சட்டத்தரணி யூ.எல்.லியாகத் அலி கேட்டுக் கொண்டார்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget