-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
மாளிகைக்காடு
அல் ஹுசைன் வித்தியாலயத்தில் ஆசிரியையாக கடமையாற்றிய காரைதீவை பிறப்பிடமாகக் கொண்ட
திருமதி ஜெயராணி இராஜரெட்ணம் தனது 57வது வயதில் 27 வருட ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று திங்கட் கிழமை ( 8 ) ஓய்வு பெற்றார்.
இதனையொட்டி
பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீர்
தலைமையில் ஆசிரியையை பாராட்டி கௌரவித்து வழியனுப்பி வைக்கும் பிரியாவிடை நிகழ்வொன்று
பாடசாலை நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில்
கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் , காரைதீவு
கோட்ட கல்வி பணிப்பாளர் பரதன் கந்தசாமி , பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் ஏ.பி.ஜவ்பர்,
ஓய்வு பெற்ற முன்னாள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் அல்ஹாஜ் ஐ.எல்.ஏ.மஜீட்
ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பாடசாலை அதிபர்
உள்ளிட்ட ஆசிரியர்களினால் மாலையிட்டு வரவேற்கப்பட்ட ஓய்வுபெற்ற திருமதி ஜெயராணி இராஜரெட்ணம்
பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு வாழ்த்துப்பத்திரம் , பரிசுப்
பொருட்கள் மற்றும் பகற்போசனம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
காரைதீவைப்
பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தனது பாடசாலைக் கல்வியினை காரைதீவு இ.கி.மி. பெண்கள் பாடசாலையிலும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியிலும்
பயின்றார். பின்னர் சுமார் 4 வருடங்கள் மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலையில் தொண்டராசிரியராக
பணியாற்றி 1992-06-05 ல்
அதே பாடசாலையில் நிரந்தர நியமனம் பெற்று கடமையேற்று சேவை செய்தார்.
பின்
1993-02-14 ல் இடமாற்றம் பெற்ற இவர் 1993-02-15 முதல் 1994-09-14 வரை வளத்தாப்பிட்டி அ.த.க. பாடசாலையிலும் 1994-09-15 முதல்
1998-07-05 வரை மீண்டும் மல்லிகைத்தீவு சதுஃஅ.த.க பாடசாலையிலும்இ
1998-07-06 முதல் 2005-05-16 வரை சம்மாந்துறை
கோரக்கர் தமிழ் வித்தியாலயத்திலும் 2005-05-17 முதல்
2011-06-21 வரை காரைதீவு இ.கி.மி.
பெண்கள் பாடசாலையிலும் இறுதியாக 2011-06-22 முதல் இடமாற்றம் பெற்று இன்று வரை இப் பாடசாலையில் கடமையாற்றி இன்றுடன் ஓய்வு பெறுகின்றார்.
இவர் சிறந்த ஒரு ஆசிரியராக, தனது சேவையைச் செய்து எல்லோரினதும் நன் மதிப்பைப் பெற்று ஓய்வு பெறும் இந் நிலையில் அவரது ஓய்வுக் கால வாழ்க்கை நிம்மதியாகவும்இ மகிழ்ச்சியானதாகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் அமைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Post a Comment