அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஆகஸ்ட் மாதாந்தக்
கூட்டம் இன்று (17) தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில்
அட்டாளைச்சேனை கோனவத்த சின்னப் பாலத்திற்கு அருகாமையில் உள்ள தோட்டத்தில்
நடைபெற்றது.
போரத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும்,
அங்கத்தவர்களின் நலன்கள் தொடர்பாகவும் மிக முக்கிய தீர்மானங்கள்,
எடுக்கப்பட்டதோடு, போரத்தின் உறுப்பினரும், வருப்பத்தான்சேனை அஸ்ரப்பா
வித்தியாலத்தின் ஆசிரியர் ஐ.ஹூசைனுத்தீன் எழுதி தயாரித்த "படிப்பினை"
எனும் தலைப்பில் உருவான குறுந்திடைப்படத்தின் இறுவட்டு வெளியிடுவது
தொடர்பாக சபைக்கு விளக்கமளித்து உரையாற்றுகையில்,
பாடசாலையில் விழுமியப் பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்
பிள்ளைகள் பெறோர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து பொறுப்புணர்ச்சியோடு
மற்றவர்களுக்கும் உதவுவதோடு, மாணவர் பாடசாலைக்கு பிந்தி வருவதாலும்,
பாடசாலையிலிருந்து விலகுவதாலும் பிள்ளைகள் கற்றலில் பின்னடைகின்றனர். இது
பாடசாலைகள் எதிர்நோக்கும் கற்றல், கற்பித்தல் பிறச்சினைகளாகும். இக்கதையில்
வரும் மாணவன் பாடசாலைக்கு தாமதித்து வருகிறான். அவன் தனது இலட்சியத்தை
அடைவதற்காக எதிர்கொள்ளும் தடைகள், சவால்கள், சமகால வாழ்வியல் பிரச்சினைகள்
என்பவற்றை சமுதாய உணர்வுகளோடு படம் பிடித்து காட்டுகின்ற கலைப்படைப்பே
"படிப்பினை" எனும் குறுந்திரைப்படத்தின் விமர்சனத்தை விளக்கி கூறினார்.
மேற்படி நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்
ஐ.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி கே.எல்.எம். நக்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment