-யூ.கே.காலீத்தீன்-
சாய்ந்தமருது அல்-அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கடற்கரைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று இன்று (17) புதன்கிழமை முற்பகல் தீக்கிரையாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளதுடன் படகுக்கு அருகாமையில் இருக்கின்ற மரங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் அவசர பணிப்பின் பேரில் மாநகர சபையின் தீயணைப்புப் படை பொறுப்பாளர் முஹம்மட் ரூமி தலைமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இப்படகு கடந்த சில மாதங்களாக பழுதடைந்த நிலையிலேயே திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment