Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | விரிவாக்கப்பட்டுள்ள அஞ்சல் சேவைகள் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் நடைபவணி!


-.எல்..றபீக் பிர்தௌஸ்-
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் விற்பனை மேன்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விரிவாக்கப்பட்டுள்ள அஞ்சல் சேவைகள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும்  நடைபவணி இன்று(05)  நிந்தவூரில் இடம் பெற்றது.

அம்பாரை மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எம்.தம்பிஐயா தலைமையில் இடம் பெற்ற இவ்விழிப்பூட்டல் நடைபவணியில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இவ்விழிப்பூட்டல் நடைபவணியில் அம்பாரை, அக்கரைப்பற்று, காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேசங்களிலுள்ள தபால் அதிபர்கள், உபதபால் அதிபர்கள், தபால் ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு, விரிவாக்கப்பட்டுள்ள அஞ்சல் சேவைகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தினர்.  

நிந்தவூர் பிரதம தபாலகத்திலிருந்து ஆரம்பமான இந்நடை பவனி பிரதான வீதிவழியே சென்று, தியோட்டர் வீதி ஊடாக, 2ஆம் குறுக்குத் தெருவை ஊடறுத்து, மீராநகர் வழியே வந்து மீண்டும் பிரதான வீதியினூடாக மீண்டும் பிரதான தபாலகத்தை அடைந்தது.

இவ்வூர்வலத்தின் போது மக்களை விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரங்களும் தபால் ஊழியர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டது.

நடைபவணியின் இறுதியில் நிந்தவூர் பிரதம தபாலகத்தில் தபால் அதிபர் .எம்..றசீட் தலைமையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது

இதில் தத்தமது பிரதேச தபாலகங்களின் குறை நிறை, தேவைகள் பற்றி தபால் அதிபர்களால் எடுத்துக் கூறப்பட்டது.

கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-

 'இப்பிரதேசத்தில் சிறந்த குணமுடைய ஆற்றலுள்ள தகுதிவாய்ந்த தபால் அதிபர்கள் இருப்பதைக் கண்டு நான் மகிழ்வடைகின்றேன். உங்களின் ஒத்துழைப்போடு கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தை முதன் நிலைக்குக் கொண்டு வர விரும்புகிறேன். அதற்காக நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். உங்கள் பிரச்சினைகள், தேவைகள் எதுவானாலும் இந்த நல்லாட்சிக் காலத்தில் முடியுமானவரை தீர்த்து வைச்கச் சித்தமாக இருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget