Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | அரசியல்வாதியாகும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை, மக்களே என்னை அரசியல்வாதி ஆக்கினார்-ஜெமீல்

-யூ. கே.காலித்தீன்-
முஸ்லிம் இளைஞர்கள் சமூக ஆய்வு அமையத்தின் (MYSRO) ஆலோசகரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அமைச்சின் தொடர்பாடல் அதிகாரியுமான ஏ.எல்.முக்தார் (ஜஹான்) னின் நெறிப்படுத்தலுக்கு அமைவாக, அவ்வமைப்பின் தலைவர் இஸ்மாயில் இக்தாரின் தலைமையில் சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்தப் பூங்கா அருகாமையில் சிரமதான நிகழ்வொன்று  இடம்பெற்றது.

பூங்காவின் சுற்றுச்சூழல் கவனிப்பாரற்று பொதுமக்கள் தமது ஒய்வு நேரத்தினைக் கழிப்பதற்கு தகுதியற்ற நிலையில் மிகவும் அசௌகரியம் மிக்கதாக  நீண்ட காலமாக குப்பையும் கூழனுமாக கிடந்த இவ்விடத்தை சிரமதானமும் செய்து அத்துடன் மர நடுகையும் செய்யப்பட்டு சுத்தமான  பிரதேசமாக மாற்றி அமைத்தனர்.  

இந்நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு,  கெளரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர்  ஏ.எல்.எம்.சலீம் மற்றும் விசேட அதிதியாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அமைச்சின் தொடர்பாடல் அதிகாரி ஏ.எல்.முக்தார்(ஜஹான்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

இங்கு ஏ.எம்.ஜெமீல் உரையாற்றுகையில்....

 மிஸ்ரோ அமைப்பானது இப் பிரதேசத்தில் பாரிய சேவைகளை செய்து மறுமலர்ச்சி செய்கின்ற அத்துடன் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் படையணியாக செயற்படுவது பாராட்டத்தக்க விடயமாகும். நானும் உங்களை போன்று சிறுவயதிலே எமது சமுகத்துக்காய் சமுக சேவையில் களம் இறங்கினேன். நாம் மற்றவர்கழுக்கு உதவி செய்யும்போது எமக்கு அழ்ழாஹ் நாம் நினைத்துபார்க்காத அளவுக்கு சமுகத்திலே உயர்த்துவான். அரசியல்லில் களம் இறங்க ஆசை எனக்கு இருக்கவில்லை. ஆனால் உண்மையான சமுகப் பற்று என்னிடம் இருந்தது. அந்த உனர்வை என்னிடம் உனர்ந்த மக்கள் என்னை அரசியல்வாதியாக தெரிவுசெய்தார்கள்.

நீங்களும் இந்த சமுகத்தை உயர்த்த தியாகம்  செய்கின்றிர்கள் உங்களை இறைவன் ஒரு போதும் கைவிடமாட்டான் நிச்சயம் இந்த மிஸ்ரோ அமைப்பை இந்த சமுகத்தில் பாரிய அமைப்பாக மாற்ற நானும், உங்களது ஆலோசகரும் எனது செயலாளருமான ஜாஹானும்  தாயாராக உள்ளோம். இன்நிகழ்வில் ACMCயின் சாய்ந்தமருது மத்திய குழுவின் பிரதித் தலைவர் எஸ்.டி. கபீர், முன்னால் சாகிரா கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியர் அப்துல் ரஹீம் ஆசிரியர் மற்றும் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget