Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய 'பொதுச் சுகாதார சிறப்பு விருது' ஜனாதிபதி மைத்ரிக்கு!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு 'பொதுச் சுகாதார சிறப்பு விருது - 2016' வழங்கி கௌரவிக்கபட்டது.

இவ்விருதானது வருடம்தோறும் பொதுச் சுகாதார துறையில் சிறந்த தலைமைத்துவ பண்புகளையும், அபூர்வமான சாதனைகளை மேற்கொண்ட தனிநபர்களை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்தியத்தின் பொதுச் சுகாதாரத் துறையில் சிறப்பான்மைக்காக வழங்கப்படும் இவ்விருதினை உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய பணிப்பாளர் Dr. பூனம் கேத்ரபால் சிங் அவர்களால், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்கள் இலங்கையில் சுகாதார சேவைகளை பலப்படுத்துவதற்கு அதிலும் குறிப்பாக புகையிலைப் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் கட்டுப்பாடுகள் தொடர்பான ஒழுங்குவிதிகளை உருவாக்கியமைக்கும், சிறுநீரக நோயினை கட்டுப்படுத்துவதற்கும் ஆற்றிய சிறப்பான பணிகளுக்குமாக வழங்கி வைக்கபட்டது.

இவ் விருதானது கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (05) மாலை இடம்பெற்ற நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டது.

 
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget