-எம்.ஐ,எம்.அஸ்ஹர், எஸ்.எம்.எம்.றம்ஸான், யு.கே.காலித்தீன்-
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்று இன்று நாட்டின் பல்வேறு
பகுதிகளிலும் பரந்து வாழும் எமது பழைய மாணவர்களினை ஒன்றிணைக்கும்
முயற்சியாக ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு
ஸாஹிராவின் பழைய மாணவர் சங்கத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (16) ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது,
சகல பழைய மாணவர்களினதும் கவன ஈர்ப்பினை கல்லூரியின் மீது கொள்ளும் பொருட்டும் தாங்கள் கல்வி கற்ற பாடசாலையினை மீள வந்து தரிசிக்கும் வாய்ப்பினை பழைய மாணவர்களுக்கு வழங்கும் நோக்கிலும் இந்நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்ததாக கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான பி.எம்.எம். பதூர்டீன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத் ஆகியோர் தெரிவித்தனர்.
ஸாஹிரா கல்லூரி இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் பல்வேறு தடயங்களினை உருவாக்கியுள்ளது. ஏறக்குறைய 70 ஆண்டு கால கல்வி மற்றுமு் புறக்கிருத்திய செயற்பாடுகளில் அழியாத பல தடங்களை பதித்து, பல சாதனைகளை புரிந்து முன்னேறிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதன் பழைய மாணவர்கள் இந்த கல்லூரியின் பழைய நினைவுகளை மீட்டி பார்க்கும் சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் குடும்பமாக கலந்து மகிழ்ந்ததுடன் சிறுவர் நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள், கல்லூரியின் குறிப்பிடத்தக்க அடைவுகளை கௌரவிக்கும் நிகழ்வுகளுடன் இராப்போசன ஏற்பாடும் செய்யப்பட்டிந்தன.
இந்நிகழ்வில் இக்கல்லூரியின் பழைய மாணவர்களான சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ,எல்.எம்.சலீம், வெளிநாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ,எல்.ஏ,அஸீஸ் ஆகியோர் இணைந்து தேசியக் கொடியனையினையும், கல்லூரி அதிபர் பி.எம்.எம். பதூர்டீன் கல்லூரி கொடியினையும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத் பழைய மாணவர் சங்கத்தின் கொடியினையும் ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்ததுடன், பழைய மாணவர்களின் பழைய நினைவு மீட்டலும் இடம்பெற்றதுடன் கல்லூரி அதிபரின் சேவையினை பாராட்டி பொறியியலாளர் போரத்தினால் பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றது.
Video Highlights Part - I
Video Highlights Part - II

Post a Comment