
-எம்.ஐ,எம்.அஸ்ஹர்-
மத்திய
சுற்றாடல் அதிகாரசபை கல்வியமைச்சுடன் இணைந்து வட
கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள பாடசாலைகளில் செயற்படுத்தி
வரும் மாணவர் சுற்றாடல் கழகங்களை மேலும் வலுவூட்டும் வகையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள வலயக் கல்வி அலுவலகங்களின் கீழ் கடமை புரியும் கோட்ட கல்வி அதிகாரிகள் , வலய சுற்றாடல் ஆணையாளர்கள் கோட்ட சுற்றாடல் ஆணையாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் ஆகியோருக்கான சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான பாடசாலை மட்ட செயற்பாட்டுகை செயலமர்வொன்று கடந்த வியாளக்கிழமை ( 15 ) அம்பாறை மத்திய
சுற்றாடல் அதிகாரசபை பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மத்திய சுற்றாடல் அதிகாரசபை பிராந்திய காரியாலயத்தின் பொறுப்பு சிரேஸ்ட சுற்றாடல் அதிகாரி எஸ்.கோகுலன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி செயலமர்வில் சிரேஸ்ட சுற்றாடல் அதிகாரிகளான எம்.ஐ,இஸ்ஹாக் , எம்.எஸ்.மங்கல , அம்பாறை மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.ரீ,நௌபல் அலி உள்ளிட்ட கல்முனை முஸ்லிம் கோட்டம், தமிழ் கோட்டம் . சாய்ந்தமருது ,நிந்தவுர் . காரைதீவு , அட்டாளைச்சேனை . திருக்கோவில் .ஆலையடிவேம்பு. தமன , அம்பாறை , தெஹியத்தக்கண்டிய . மகாஒயா . உகன கோட்ட கல்விப் பணிப்பாளர்களும் வலய மற்றும் கோட்ட ஆணையாளர்களும் கலந்து கொண்டனர்.



Post a Comment