Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகான கராத்தே சுற்றுப்போட்டி!

ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகான கராத்தே சுற்றுப்போட்டி கிழக்கு மாகான சம்மேளன தலைவர் முகம்மத் இக்பால் தலைமையில் நேற்று (14)  வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் இருநூறு வீரர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் அம்பாறை மாவட்டம் அதிக பதக்கங்களை பெற்றுக்கொண்டது.

இப்போட்டியானது ஆறு வயது தொடக்கம் பதின்மூன்று வயதுவரையான Sub Junior  14/15 வயதுடைய Cadet பிரிவு,  16/17 வயதுடைய Junior மற்றும் 21 வயதுக்கு கீழ்பட்டவர்களும், 21 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரிவினர்கள் கிலோ அடிப்படையிலும் இப்போட்டி நடைபெற்றது.

இப்போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆகிய இடங்களை பெற்ற வீரர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய கராத்தே போட்டியானது எதிர்வரும் 25,26,27,28 ஆகிய திகதிகளில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget