நுரைச்சோலை அனல்மின் பிறப்பாக்க நிலையத்தில் ஏட்பட்டுள்ள கோளாறு காரணமாகவும், நிலவும் வறட்சியினால் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாடு காரணமாகவும், நாளொன்றுக்கு மூன்றறை
மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் மீள்
புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.காலைவேளையில் 2.30 மணித்தியாலங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் என இம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு வலையங்களாக பிரித்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எனினும், கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், வைத்தியசாலைகளிலும், தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது எனவும் மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment