-யூ. கே. காலித்தீன், ஏ.பி.எம்.அஸ்ஹர்-
அகில இலங்கை ரீதியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி 4×100M அஞ்சல்
ஓட்ட போட்டியில் (44.1 நிமிடத்தில்) ஓடி முடித்து வெண்கலப் பதக்கம் பெற்று
சாதனை படைத்துள்ளது.
இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் கண்டி போகம்பரை மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.
இம் மாணவர்களை கல்முனை ஸாஹிரா கல்லூரி பழய மாணவ சங்கத்தினால் கெளரவித்து ஊர்வலமாக அழைத்து செல்லும் நிகழ்வு இன்று (18) மாளிகைக்காடு சந்தியிலிருந்து இடம்பெற்றது.
இதன்போது, சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச செயலாளர்களாலும், கல்முனை வலயக் கல்வி பணிப்பாளரினாலும், மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை பள்ளிவாசல்கள், வர்தக சங்கங்கள், பொது அமைப்புகள், மற்றும் விளையாட்டு கழகங்கள் இணைந்து சாதனைபடைத்த மாணவர்களையும், மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர், அப்ராஜ் றிலா அவர்களையும் வாழ்த்தி கல்முனை நகரெங்கும் வீரர்களை பொன்னாடை போர்த்தியும், நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கெளரவித்தனர்.






Post a Comment