Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NOTICE | தென்கிழக்குப் பல்கலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 20ம் திகதி!

-எம்.வை.அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகதொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட வழிகாட்டல் பிரிவும் இணைந்து நடாத்தியஇளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தில்கலந்து பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 20ம் திகதிவியாழக் கிழமை, கலை 9.00 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.

பல்கலைக்கழகதொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம். எஸ்.எம். ஜலால்தீன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம். எம். எம். நாஜீமும்  விஷேட அதிதிகளாக அம்பாரை மாவட்ட அரசாங்கஅதிபர் திரு. ஆஷிதபி. வணிகசிங்வும்  UNDP யின் நிகழ்ச்சி முகாமையாளர் முஹம்மது முஸையினும் கௌரவ அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸன், இறக்காமம் பிரதேசசெயலாளர் எம். எம். எம். நஸீர், நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் எஸ்.கரன், பொத்துவில் பிரதேசசெயலாளர் என். எம். முஹம்மத் முஸர்ரத், சம்மாந்துறை பிரதேசசெயலாளர் மன்சூர், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ் ஜகராஜன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 97 அம்பாரை மாவட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள்; வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், உதவிப் பதிவாளர்கள் அனைவரும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget