-எம்.வை.அமீர், யு.கே.காலிதீன்-
படித்துவிட்டு தொழிலின்றி இருக்கும் இளைஞர்
யுவதிகளை தொழில் முயற்சிக்குள் உள்ளீர்ப்பதனூடாக அவர்களது வாழ்வாதாரத்தை
பெருக்குவதுடன் நாட்டின் அபிவிருத்தியிலும் இவர்களை பங்குதாரர்களாக மாற்றும்
திட்டத்துடன் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திசபை முன்னெடுத்து வரும் திட்டத்தின்கீழ்
விழிப்புணர்வு கருத்தரங்கு சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தில் நேற்று (23) இடம்பெற்றது.
முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு அமைப்பின்
தலைவர் இஸ்மாயில் இக்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை
அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி
தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக இலங்கை அரச
வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரின் பொது மக்கள் தொடர்பு அதிகாரியும் கைத்தொழில்
அபிவிருத்தி சபையின் சாய்ந்தமருது இணைப்பாளருமான ஏ.எல்.ஜஹானும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்திசபையின்
பிரதிப்பணிப்பாளர் நிஷாந்த அபேதுங்க, கைத்தொழில் மேன்படுத்தல் முகாமையாளர்
எஸ்.எம்.பைரோஸ் மற்றும் வளவாளராக எம்.எம்.நௌசாத் ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துரை
வழங்கினர்.
Post a Comment