Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | பாடசாலைகளுக்கான சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்!


-ஏ.எல்..றபீக் பிர்தௌஸ்-
கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள மூவினப்  பாடசாலைகளுக்கான சர்வதேச சமாதான தின நிகழ்வுகள் நேற்று (22)  நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் இடம்பெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மும்மதத் தலைவர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள தமிழ், முஸ்லீம், சிங்கள மாணவர்களின் சமாதாணத்தை வலியுறுத்தக் கூடிய கலை, கலாச்சார நிகழ்வுகள் பலவும்; இடம் பெற்றன.

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களையும் சமமாக மதித்து, இனநல்லிணக்கம், மற்றும் சமாதானத்திற்காக இதயசுத்தியோடு உழைத்தமைக்காக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாமுக்கு இவ்வருட கல்முனைக் கல்வி வலயக் காரியாலயத்தின் 'சமாதான விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் பொன்னாடை போற்றி, பொற்கிளி, நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'வலியவர்கள் எழியவர்களைப் புரிந்து கொண்டால் அதுதான் சமாதானம்! அதற்கு இந்த கோவலன், கண்ணகி நாடகம் ஒரு நல்ல உதாரணம். ஏழியவர்களின் உணர்வுகளை, உணர்வு பூர்வமாக வலியவர்கள் புரிந்து செயற்படுகின்ற போதெல்லாம்  சமாதானத்திற்கான ஒரு அறை கூவல் விடுக்கத் தேவையில்லாத நிலமை ஏற்படும். இங்கு மாணவர்களால் மேடை ஏற்றப்பட்ட கோவலன், கண்ணகி நாடகத்தில் வரும் கண்ணகி பாத்திரத்தையே அதிகமானவர்கள் விரும்புவதுண்டு. ஆனால், நான் இந்நாடகத்தில் வரும் மன்னன் பாத்திரத்தையே எப்போதும் விரும்புகிறேன். காரணம் கோவலன் எவ்வளவோ பெரிய வலிமையுள்ளவனாக இருந்தும், நீதி,நேர்மைக்குக் கட்டுப்பட்டு ஆட்சி புரிந்திட்ட போதும் நாம் தவறு செய்து விட்டோமே என்று வருந்தி உயிரை விடுகின்ற நேர்மைதான் எழியவர்களைப் புரிந்து கொண்டதாகும்' எனத் தெரிவித்தார்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget